Latestமலேசியா

‘கொலம்பியா’ கிள்ளானில் 281 சட்டவிரோத குடியேறிகள் கைது

கிள்ளான், பிப் 4 – போர்ட் கிள்ளான், Jalan Sekolah Persiaran Raja Muda-வைச் சுற்றியுள்ள வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி Op Khas Aman சோதனையில், 281 சட்டவிரோத குடியேறிகள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

பிற்பகல் 2:30 மணி தொடங்கி மூன்று மணி நேரத்திற்கு நடத்தப்பட்ட 348 அதிகாரிகள் உட்படுத்திய அந்த சோதனை நடவடிக்கையில் மொத்தம் 469 வெளிநாட்டவர்கள் சோதனையிடப்பட்டனர்.

அவர்களில் 52 பெண்கள் மற்றும் ஒரு சிறுமியை உட்படுத்தி 281 பேர் கைது செய்யப்படுள்ளனர். அவர்களில், நேப்பாளம், வங்காளதேசம், இந்தோனேசியா, இந்தியா, மியன்மார், பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர். நேற்று கைதானவர்களில் நேப்பாளத்தவர்களே அதிக எண்ணிக்கையில் அதாவது 122 பேர் பிடிபட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ முகமட் சுஹேலி சாய்ந் சுட்டிக்காட்டினார்.

இச்சோதனையின் போது, பல சட்டவிரோத குடியேறிகள் கூரையின் கீழ் மறைந்திருந்தது தெரியவந்துள்ளது. இருப்பினும் அவர்களை ட்ரோன் மூலமாக அதிகாரிகள் வெற்றிகரமாக கண்டறிந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!