
ஜோகூர், ஜூலை 10-ஏய்மஸ்ட் பல்கலைக்கழகத்திற்கு அரசாங்கம் இதுவரை 221 மில்லியன் ரிங்கிட் மானியம் வழங்கியிருப்பதாக ஒரு தமிழ் ஊடகம் வெளியிட்ட செய்தியில் சற்றும் உண்மையில்லை இல்லை என்றும் அதன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் ம.இ.கா தலைவரும் ஏய்மஸ்ட் பல்கலைக்கழக வேந்தருமான டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறியுள்ளார் .
அரசாங்கம் எப்போது எதற்காக எவ்வளவு மானியம் வழங்கியது என்றும் விக்னேஸ்வரன் விளக்கினார்.
வழங்கப்படும் மானியம் மாணவர்களின் உபகாரச் சம்பளத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனும் கூற்றையும் அவர் மறுத்ததோடு அதன் பயன்படுத்தப்படும் நோக்கம் குறித்தும் தெளிவுப்படுத்தினார்.
ஏய்மஸ்ட் பல்கலைக்கழக மானியம் தொடர்பில் சரியான தகவல் பெறுவதற்கு தங்களை அணுகாமல் தாங்களாகவே மக்களை குழப்பும் வகையில் இது போன்ற தவறான கருத்துகளை வெளியிடுவதை உஅடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் விக்னேஸ்வரன் எச்சரித்தார்.



