Latestமலேசியா

ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழா; கல்வி வாய்ப்புகள் மற்றும் கற்றல் வசதிகளை பெற்றோர்கள் தெரிந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – விக்னேஸ்வரன்

பாலிங், மே 25 – மலேசிய இந்தியர்களுக்கான பல்கலைக்கழகமான ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக இன்று அதன் வளாகத்தில் நடந்தேறியது.

143 மாணவர்கள் மருத்துவ துறையிலும், 82 மாணவர்கள் பல் மருத்துவ துறையிலும், 74 மாணவர்கள் பார்மசி துறையிலும், 36 மாணவர்கள் applied sc துறையிலும், 186 மாணவர்கள் health professionals துறையிலும், engineering துறையில் 19 பேரும், business management துறையில் 102 பேரும் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த மொத்தம் 642 மாணவர்கள் இன்று பட்டம் பெற்றனர்.

பல்கலைக்கழக வேந்தர் மற்றும் ம.இ.கா தேசியத் தலைவருமான டான் ஶ்ரீ விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய அவர், இங்கு பயிலும் மாணவர்களின் உயர்கல்விப் பயணம் இன்னும் சிறப்பாக இருக்கும் வண்ணம் பல்கலைக்கழக வசதிகள் மேம்படுத்தப்பட்டு தரம் உயர்த்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இன்றைய நிகழ்வின் மற்றொரு சிறப்பு அம்சமாக, ம.இ.கா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ சரவணன் அவர்கள் பல்கலைக்கழக இணை வேந்தராக பதவி பிரமானம் எடுத்துக் கொண்டார்.ஒரு மாணவரின் வாழ்க்கையில் என்றென்றும் நினைவில் இருக்ககூடிய ஒன்று பட்டமளிப்பு விழாவாகும். அதில் பெற்றோர்கள், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் வந்து பாராட்டு தெரிவித்து மகிழ்ச்சியினை பகிர்ந்துக் கொண்டதை இன்றைய நாளில் பார்க்க முடிந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!