Latestமலேசியா

கடந்த ஆண்டு நாட்டில் பதிவு செய்யப்பட்ட பன்றி பண்ணைகளின் எண்ணிக்கை 338ஆக குறைந்தது – முகமட் சாபு

கோலாலம்பூர், ஜூன் 26 – 2024-ஆம் ஆண்டில் 435 பன்றி பண்ணைகள் இருந்த நிலையில், கடந்த ஆண்டு மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட பன்றி வளர்ப்புப் பண்ணைகளின் எண்ணிக்கை 338 ஆக குறைந்தது.

2025 ஆம் ஆண்டில் மொத்தம் 115,283.7 மெட்ரிக் டன் பன்றி இறைச்சி உற்பத்தி செய்யப்பட்டதாகவும், அதற்கு முந்தைய ஆண்டான 2024 ஆம் ஆண்டில் 136,506.30 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டதாக விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்தார்.

மலேசியச் சந்தையின் மொத்தத் தேவையைப் பொறுத்தவரை, 2025-ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட உள்நாட்டுத் தேவை 213,927.92 மெட்ரிக் டன்களாகும்.

மலேசியாவின் மொத்த மக்கள் தொகையில் 36.5 விழுக்காட்டினராக உள்ள முஸ்லிம் அல்லாதவர்களின் பன்றி இறைச்சி நுகர்வுத் தேவையின் அடிப்படையில் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஆண்டு நாட்டின் மொத்த பன்றி இறைச்சி விநியோகம் 221,958.69 மெட்ரிக் டன்களாக மதிப்பிடப்பட்டிருந்தது.

அந்த விநியோகம் போதுமானதாக இருந்ததாக கெப்போங் – Pakatan Harapan நாடாளுன்ற உறுப்பினர் லிம் லிப் எங் (Lim Lip Eng) எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்ற இணைய பதிவேட்டில் வழங்கிய பதிலில் Mohamad Sabu குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!