Latestமலேசியா

கடல் சிப்பியால் நச்சுணவுப் பாதிப்பு? மலாக்காவில் புதியச் சம்பவம்

மலாக்கா, ஜூன்-11 – கடல் சிப்பி உண்டதால் ஏற்பட்டதாக நம்பப்படும் நச்சுணவுப் பாதிப்பு தொடர்பில் மலாக்காவில் ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட 34 வயது ஆடவர் ஜூன் 8-டாம் தேதி அலோர் காஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை, மாநில சுகாதாரத் துறை உறுதிபடுத்தியது.

அது இன்னமும் மாநில மீன்வளத் துறையின் விசாரணையில் உள்ளது.

அந்நோயாளி சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது குணமடைந்துள்ளார்.

விரைவிலேயே அவர் வீடு திரும்புவார் என அத்துறை அறிக்கையொன்றில் கூறியது.

நெகிரி செம்பிலான், போர்டிக்சன் கடற்கரையில் இருந்து எடுக்கப்பட்ட நீர் மற்றும் சிப்பி மாதிரிகள் மீது நடத்தப்பட்ட சோதனைகளில், அவற்றில் இன்னமும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய biotoksin நச்சு இருப்பது உறுதிச் செய்யப்பட்டதாக, மீன்வளத்துறை கடந்த வாரம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆகக் கடைசியாக சிப்பி மாதிரிகள் ஆய்வுக் கூட சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், அந்த biotoxin நச்சு தொடர்ந்து குறைந்து வருகிறது.

என்றாலும், PD-யில் lala, lokan, kerang உள்ளிட்ட சிப்பி வகைகளை எடுப்பதற்கும் விற்பதற்கும் விதிக்கப்பட்ட தடை, பொது மக்களின் பாதுகாப்புக் கருதி தொடர்ந்து அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!