Latestமலேசியா

கடும் வெயிலில் நிற்குமாறு அபராதம் விதிக்கப்பட்ட மாணவர் ; மாற்றுதிறனாளி என வகைப்படுத்தப்படலாம்

கோலாலம்பூர், மே 30 – வகுப்பறைக்கு வெளியில் நீண்ட நேரம் வெயிலில் நிற்குமாறு ஆசிரியர் பணித்ததால், வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட, அம்பாங்கிலுள்ள பள்ளி ஒன்றின் ஐந்தாம் ஆண்டு மாணவர் ஒருவர், மாற்றுத்திறனாளியாக வகைப்படுத்தப்படலாம் என அவரது குடும்பத்தார் கூறியுள்ளனர்.

ஏப்ரல் 30-ஆம் தேதி நடந்த அச்சம்பவத்தால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக தனது மகனை, மாற்றுத் திறனாளியாக வகைப்படுத்தும் பரிந்துரை கடிதம் ஒன்றை அம்பாங் மருத்துவமனை வெளியிட்டுள்ளதாக, அம்மாணவரின் 35 வயது தாயார் எ.டி. மோகஹானா செல்வி கூறியுள்ளார்.

வெப்ப பக்கவாததின் விளைவாக, அச்சிறுவன் நரப்பியல் பிரச்சனைக்கு இலக்காகி இருக்கலாம் என நம்பப்படுகிறது.

அதனால், அவர் இனி சாதாரண பள்ளியில் பயில முடியாது எனவும், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிக்கு அனுபுமாறும், மருத்துவமனை தரப்பினர் தம்மிடம் கூறியதாகவும், தலைநகரில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் மோகஹானா தெரிவித்தார்.

முன்னதாக, கொளுத்தும் வெயிலில் சுமார் மூன்று மணி நேரம் நிற்குமாறு பணித்ததால் அந்த 11 வயது மாணவர் பாதிப்புக்கு இலக்காகி உள்ளதாக, பேமாஸ் தலைவர் எஸ். தயாளன் கூறியுள்ளார்.

அதனால், தலைவலி, கண் எரிச்சல் போன்ற உபாதைகளுக்கு இலக்கான அம்மாணவர் முதல் முறையாக வலிப்பு நோய்க்கும் இலக்கானார்.

அதனால்,சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு எதிராக சிவில் வழக்கு தொடரப்படும் எனவும் தயாளன் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!