கர்நாடக, ஏப்ரல் 4 – கர்நாடக மாநிலத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்று நேற்று தனது வீட்டின் அருகே விளையாட்டிக் கொண்டிருந்த போது 16 அடி ஆழ்துளையில் கிணற்றில் விலுந்த சம்பவன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது . அக்குழந்தையை மீட்கும் நடவடிக்கை மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட வந்த நிலையில் சுமார் 20 மணி நேரத்திற்குப்பின் அக்குழந்தை தற்போது மீட்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த குழந்தை விழுந்த கிணற்றுக்கு அருகே 21 அடி ஆழத்திற்கு மண் தோண்டும் இயந்திரத்தின் உதவியோடு குழியை தோண்டி வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் உடனடி சிகிச்சை வழங்கி அக்குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர்.
இருப்பினும் அக்குழந்தையின் உடல்நலம் தொடர்பான தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.