Latestமலேசியா

கல்வி அமைச்சர் குறித்தப் பழையக் காணொலி மீண்டும் பதிவேற்றமா? நடவடிக்கை எடுக்க MCMC-க்கு உத்தரவு

ஷா ஆலாம், ஏப்ரல் 16 – கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் தொடர்பில் Tik Tok-கில் @janggut.putih என்ற கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஒரு காணொலி 2019-ல் எடுக்கப்பட்டதாகும் என தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் உறுதிப்படுத்தியுள்ளார்.

பார்ப்போரைச் சினமூட்டும் நோக்கில் வேண்டுமென்றே 1 நிமிடம் 49 வினாடிகளைக் கொண்ட அப்பழையக் காணொலி மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக ஃபாஹ்மி கூறினார்.

எனவே, அதனைப் பதிவேற்றிய நபரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்திட, தகவல்-பல்லூடக ஆணையம் MCMC-யை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ஃபாட்லீனா சிடேக்கை அவதூறு செய்யும் வகையில் காணொலி பதிவேற்றியிருப்பதாகக் கூறி, சம்பந்தப்பட்ட டிக் டோக் கணக்கின் Screenshot-டை X சமூகத் தளப் பயனர் ஒருவர் முன்னதாகப் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

அவரின் அப்பதிவுக்குப் பதிலளிக்கும் வகையில் ஃபாஹ்மி அவ்வாறு சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!