Latestமலேசியா

மின் விநியோக முறையை மின்னல் தாக்கியது; Kelana Jaya LRT சேவைப் பாதிப்பு

கோலாலம்பூர், ஏப்ரல் 16 – Kelana Jaya வழித்தடத்திற்கான LRT ரயில் சேவை இன்று மாலை குறிப்பிட்ட அளவிலான ரயில்களுடனேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மின்னல் தாக்கியதில் மின் விநியோக முறையில் கோளாறு ஏற்பட்டிருப்பதே சேவைப் பாதிப்படையக் காரணம் என Rapid KL நிறுவனம் தெரிவித்தது.

இதனால் ஒரு ரயிலுக்கும் இன்னொரு ரயிலுக்குமான சேவை நேர இடைவெளி 4-5 நிமிடங்கள் வரை எடுக்கலாம்.

எனவே, Kelana Jaya LRT வழித்தடத்தைப் பயன்படுத்த விரும்புவோர், முன்கூட்டியே பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேல் தகவல்களை, @AskRapidKL என்ற X (டிவிட்டர்) பக்கத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!