Latestமலேசியா

அடுத்தாண்டு இறுதிக்குள் 10 ஆயிரம் EV charging நிலையங்கள்; அரசாங்கம் இலக்கு

கோலாலம்பூர், ஏப்ரல் 16 – நாடு முழுவதும் அடுத்தாண்டுக்குள் மின்சார வாகனங்களுக்கான (EV) 10,000 charging நிலையங்களை அமைக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.

நெடுஞ்சாலைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அவ்வசதி ஏற்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

அதிகமான இடங்களில் அந்த charging நிலைய வசதிகள் இருந்தால் தான், மேலும் அதிகமான மலேசியர்கள் மின்சார வாகனங்களைப் (EV) பயன்படுத்துவதை ஊக்குவிக்க முடியும்.

எனினும்,அதற்கு தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பும் அவசியம் என அமைச்சர் கூறினார்.

எரிபொருள் சார்ந்த வாகனங்களைப் போல் அல்லாமல், EV வாகனங்கள் charge செய்யப்பட வேண்டும்.

அதன் காரணமாகத் தான், மக்கள் மத்தியில் EV வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் அரசாங்கம், நாடு முழுவதும் அதற்கான charging நிலையங்களை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

நடப்பில் அத்தகைய 600-க்கும் மேற்பட்ட நிலையங்கள் நாடளாவிய நிலையில் இருப்பதாக அறியப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!