Latestமலேசியா

காதலியை 23வது மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த ஆடவன் மனநிலை பரிசோதனைக்கு உத்தரவு

கோலாலம்பூர், ஜூன் 7 -ஷா அலாம் , செத்தியா அலாமில் தாய்லாந்தைச் சேர்ந்த தனது காதலியை அடுக்கு மாடி வீட்டின் 23 ஆவது மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட லோரி ஓட்டுநருக்கான மனநலப் பரிசோதனை ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட 37 வயது நாதனின் ( Nathan ) மனநிலையை பரிசோதிப்பதற்கு ஒரு மாத கால நீட்டிப்புக்கு பேரா , Ulu Kinta Tanjong Rambutan Bahagia மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் மனு செய்துள்ளார். குற்றஞ்சாட்டப்பட்டவரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவநந்தன் ராகவா இதனை தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவரின் மனநிலையை மதிப்பிடுவதற்கு மருத்துவருக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால், குற்றவியல் சட்டத்தின் 342 விதியின் (4) ஆவது உட்பிரிவின் கீழ் இந்த நீட்டிப்பு அனுமதிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி இரவு மணி 10.12 அளவில் செத்தியா அலாம் , ஜாலான் செத்தியா டாகாங்கிலுள்ள (Setia Alam, Setia Dagang) அடுக்குமாடி வீட்டில் Mawika Lumyai-யை கொலை செய்ததாக நாதன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

உண்மையில், குற்றம் சாட்டப்பட்டவரின் மனநல அறிக்கையை வழங்க இன்று ஷா ஆலம் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முகமட் ரெட்ஷா அஷார் ( Mohamad Redza Azhar ) முன்னிலையில் வழக்கு நடைபெற்றிருக்க வேண்டும். எனினும் அது ஆகஸ்ட் 9 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சிவாநந்தன் ராகவா தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!