Latestமலேசியா

கின்றாரா தோட்ட தமிழ்ப்பள்ளியின் வளாகத்தை மேம்பாட்டு நிறுவனம் எடுத்துக்கொள்ள சிலாங்கூர் அரசு அனுமதிக்கவில்லை – மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் விளக்கம்

கோலாலம்பூர், மார்ச் 26 – Kinrara தோட்ட தமிழ்ப் பள்ளியின் நில வளாகத்தை சாலை விரிவாக்க பணிக்காக மேம்பாட்டு நிறுவனம் எடுத்துக்கொள்வதற்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் இணக்கம் தெரிவிக்கவில்லையென மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் Ng Sze Han தெரிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் Kinrara தோட்ட தமிழ்ப்பள்ளி வளாகத்தின் நிலத்தை பாதிக்காமல் இரண்டு வழி சாலையை மூன்று வழி சாலையாக மேம்படுத்துவதற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் மேம்பாட்டு நிறுவனத்திறகு அனுமதி வழங்கியதாக அவர் கூறினார். 1974ஆம் ஆண்டில் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம் உருவாக்கப்படுவதற்கு முன்னதாகவே, அதாவது 1946ஆம் ஆண்டு Kinrara தோட்ட தமிழ்ப்பள்ளி உருவாக்கப்பட்டது. கூட்டரசு பிரதேச எல்லைப் பகுதியை அந்த பள்ளியின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியுள்ளது .

2020ஆம் ஆண்டில் அந்த தமிழ்ப் பள்ளிக்கு அருகே 1,600 வீடுகளுக்கான இரண்டு புளோக் வீடமைப்பு கட்டிடத்திற்கு கோலாலம்பூர் மாநாகர் மன்றம் அனுமதி வழங்கியது. இதனால் Jalan Kinrara Mas இரண்டு வழி சாலை தடமாக பிரிக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக Jalan Kinrara Mas சாலையை நான்கு தட சாலையாக அகலப்படுத்த மேம்பாட்டு நிறுவனம் பள்ளி இடத்தை எடுத்துக்கொண்டது. எனினும் இப்போதைக்கு அங்கு மூன்று தட சாலையை மட்டுமே மேம்படுத்துவதற்கு 2023ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி கோலாலம்பூர் மாநாகர் மன்ற தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மேம்பாட்டு நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் Ng Sze Han தெரிவித்தார். ஆனால் அந்த பள்ளியின் ஒரு பகுதி நிலம் ஏப்ரல் 1ஆம் தேதிக்குள் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மேம்பாட்டு நிறுவனம் கோரிக்கை விடுதுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக சிலாங்கூர் முதலீடு, வர்த்தகம் மற்றும் நடமாட்ட குழுவுக்கு பொறுப்பு வகிக்கும் ஆட்சிக்குழு உறுப்பினருமான Ng Sze Han தெரிவித்தார்.

Kinrara தோட்ட தமிழ்ப் பள்ளி நிலத்தை கையடக்கப்படுத்தும் முடிவை எடுப்பதற்கு முன் அந்த பள்ளியில் பயின்றுவரும் 700 மாணவர்களின் சமூக நலன் மற்றும் அவர்களது தேவைகளை பரிசீலிக்கும்படி மேம்பாட்டு நிறுவனம் மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தை அவர் கேட்டுக்கொண்டார். அந்த பள்ளியின் உரிமைகள் பாதுகாப்பதை கோலாலம்பூர் மாநாகர் மன்றமும் மேம்பாட்டு நிறுவனமும் உறுதிப்படுத்துவதற்கான தீர்வை கண்டறிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக கல்வி அமைச்சிடமும் தாம் தொடர்பு கொண்டிருப்பதாகவும் Ng தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!