Latestமலேசியா

கிளந்தானில் ஜெலி -குவா மூசாங், பஹாங்கில் தெமர்லோ 2ஆம் நிலை வெப்ப அலையால் பாதிப்பு

கோலாலம்பூர், ஏப் 4 – கிளந்தானில் Jeli , Gua Musang மற்றும் Pahang கின் Temerloh நேற்று மாலை மணி 4.30 நிலவரப்படி முறையே இரண்டாம் நிலை வெப்பமான வானிலை அல்லது வெப்ப அலையை பதிவு செய்துள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறையான Met Malaysia தெரிவித்துள்ளது. தீபகற்ப மலேசியாவில் 20 பகுதிகளும் , சபா மற்றும் சரவாக்கில் தலா இரண்டு பகுதிகளும் வெப்பமான சீதோஷ்ன நிலையை பதிவு செய்தது அல்லது எச்சரிக்கை நிலையில் இருப்பதாக Met Malaysia தனது முகநூலில் பதிவிட்டுள்ளது.

பெர்லீஸில் அனைத்து பகுதிகளும் கெடாவில் Padang Terap மற்றும் Baling, பேராவில் Hulu Perak, Kuala Kangsar , நெகிரி செம்பிலானில் Tampin , Jelebu மற்றும் Pahang கில் Jerantut, Bera,Raub, Lipis, Maran, Pekan , Bentong ஆகியவையும் இவற்றில் அடங்கும். இதுதவிர Kelantaனில் Pasir Mas, Tanah Merah. Kuala Kerai. Terangganu வில் Besut மற்றும் Dungunனும் வெப்ப அலையின் பாதிப்பை எதிர்நோக்கின. சரவாக்கில் Mukah மற்றும் Limbang, Sabah வில் Tuaran மற்றும் Tenom வட்டாரங்களிலும் தொடர்ந்து மூன்று நாட்களாக கூடிய பட்ச வெப்ப நிலை 37 செல்சியஸ் டிகிரியிலிருந்து 40 டிகிரி செல்சியஸாக வெப்ப அலை இருந்துள்ளது. முதல் நிலை வெப்பமான காலநிலை அல்லது விழிப்புடன் இருப்பது என்பது தினசரி அதிகபட்ச வெப்பநிலையான 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தபட்சம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இருக்கும். மார்ச் 29 ஆம் தேதி தொடங்கி மே வரை தொடரும் இடைக்கால பருவமழையின் தொடக்க கட்டத்தில் நாடு நுழைவதால், வெப்பம் மற்றும் வறட்சியான வானிலை இந்த மாதத்தின் நடுப்பகுதியில் படிப்படியாக குறையும் என்று மெட்மலேசியா முன்பு அறிவித்திருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!