![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/10/MixCollage-10-Oct-2024-11-25-AM-4552.jpg)
கிள்ளான், அக்டோபர்-10 – கிள்ளான், புக்கிட் திங்கியில் காரிலிருந்து உணவை எடுப்பதற்தாக வெளியில் சென்ற 12 வயது சிறுமி காணாமல் போயுள்ளார்.
செவ்வாய்க்கிழமை, பண்டார் புக்கிட் திங்கி 1, லோரோங் பத்து நீலாம் 1B அடுக்குமாடி வீட்டில் மகள் காணாமல் போனதாக, அவளது தாயார் போலீசில் புகார் செய்தார்.
பிற்பகல் 2.20 மணியளவில் அடுக்குமாடி வீட்டின் கீழ்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிலிருந்து உணவை எடுத்து வருமாறு, தாய் மகளை அனுப்பியுள்ளார்.
தனியாக கீழே சென்ற மகள் அதன் பின்னர் வீடு திரும்பவேயில்லை.
காணாமல் போன சிறுமியின் பெயர் Madrafataha Indal Bangsawan.
சற்று ஒல்லியாக, 150 செண்டி மீட்டர் உயரத்துடன், நல்ல நிறமாகவும் உள்ள அச்சிறுமி, கடைசியாக பச்சை நிற விளையாட்டு T சட்டையும், கறுப்பு நிற விளையாட்டு கால்சட்டையும் அணிந்திருந்தார்.
அச்சிறுமியை கண்டாலோ, அவளிருக்குமிடம் தெரிந்தாலோ தென் கிள்ளான் போலீஸ் நிலையத்தையோ அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையங்களையோ தொடர்புகொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.