Latestமலேசியா

குண்டாங்கில் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து விழுந்து 17 வயது இளைஞர் மரணம்

கோலாலம்பூர், அக்-26-சிலாங்கூர், குண்டாங்கில் உள்ள ஒரு குடியிருப்பின் பால்கனியிலிருந்து விழுந்திருக்கலாம் என்று நம்பப்படும் க17 வயது இளைஞர் ஒருவர் நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டார்.

அச்சம்பவம் குறித்த தகவல் இரவு சுமார் 10:30 மணிக்குக் காவல் துறைக்குக் கிடைத்ததாக சுங்கை பூலோ மாவட்டக் காவல் துறைத் தலைவர் Superintenden Mohd Hafiz Nohammad Nor தெரிவித்தார்.

அச்சம்பவம் ‘திடீர் மரணம்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வேளையில் அம்மரணம் பற்றி எந்த ஊகங்களையும் வெளியிட வேண்டாம் என Mohd Hafiz பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார். அதோடு சரிபார்க்கப்படாத தகவல்களைச் சமூக ஊடகத் தளங்களில் பரப்பாமல் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரின் தனிப்பட்ட உரிமையை மதிக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!