Latestமலேசியா

‘குழந்தை’ பிறப்பு சான்றிதழ் தகவல்களை ஏமாற்றிய நபர் கைது

புத்ராஜெயா, ஏப்ரல் 18 – 16 ஆண்டுகளுக்கு முன்பு, தனது ‘குழந்தையின்’ பிறப்பு சான்றிதழ் பதிவுக்கு விண்ணப்பம் செய்த போது, தவறான தகவலை வழங்கிய சந்தேகத்தின் பேரில், உள்நாட்டு ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்ராஜெயாவிலுள்ள, தேசியப் பதிவுத் துறையின், புலனாய்வு மற்றும் அமலாக்க அலுவலகத்திற்கு, நேற்று வந்திருந்த போது, அந்த 58 வயது நபர் கைதுச் செய்யப்பட்டார்.

2008-ஆம் ஆண்டு, மே எட்டாம் தேதி, பிறப்பு சான்றிதழ் பதிவுக்கு விண்ணப்பிக்கும் போது, அவர் வேண்டுமென்றே தவறான தகவல்களைச் சமர்ப்பித்தது, விசாரணையில் தெரியவந்துள்ளது.

குழந்தையின் பிறந்த தேதி, பெற்றோர்களின் விவரம் ஆகியவை குறித்து அவர் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை வழங்கியதாக நம்பப்படுகிறது.

அதனால், அந்த பொய்யான தகவலின் அடிப்படையில், தனியார் மருத்துவமனை ஒன்றில் பிறந்த குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்நபருக்கு உடந்தையாக செயல்பட்டு, தேசிய பதிவுத் துறைக்கு தவறான தகவல்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் 39 வயது மற்றும் 59 வயதான மேலும் இருவரும் கைதுச் செய்யப்பட்டுள்ள வேளை ; அவர்களுக்கு எதிராக கூடிய விரைவில் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்படவுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!