
தைப்பிங், ஜூலை 3 – பேராக் தைப்பிங் சிறையைச் சேர்ந்த 5 சிறைக் காவலர்கள், 3 கைதிகளை தாக்கி காயப்படுத்திய குற்றத்திற்காக இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்ட போது அம்மூவரும் குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.
கடந்தாண்டு ஜனவரி 17 ஆம் தேதி, குற்றம் சாட்டப்பட்ட சிறை காவலர்கள் கைதியை லத்தியால் தாக்கியதற்காகவும், மேலும் கைதியை வேண்டுமென்றே காயப்படுத்தியதற்காகவும் குற்றம் சாட்டப்பட்டனர்.
நீதிமன்றம், 4,000 ரிங்கிட், 3,000 ரிங்கிட், மற்றும் 2,000 ரிங்கிட் என வெவ்வேறு ஜாமீன் தொகைகளை செலுத்த சம்பந்தப்பட்ட மூவருக்கும் உத்தரவிட்டது.
இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணை செப்டம்பர் 7 மற்றும் செப்டம்பர் 8 ஆகிய தேதிகளில் நடைபெவுள்ளது.



