
கோலாலாம்பூர், ஏப்ரல்-14-சித்திரைப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, இன்று காலை முதலே கோலாலம்பூர் கோட்டுமலை பிள்ளையார் கோவிலில் பக்திப் பெருக்குடன் சித்திரை புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
காலை 7.30 மணியளவில் தொடங்கிய சிறப்புப் பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
விநாயகப் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அர்ச்சனைகள் மற்றும் வழிபாடுகளில் பங்கேற்று பக்தர்கள் புத்தாண்டு ஆசியைப் பெற்றனர்.
ஆலய வளாகத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தேங்காய் உடைத்துத் தங்கள் நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர்.
வருகை தந்த அனைவருக்கும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
வணக்கம் மலேசியா மேற்கொண்ட பிரத்யேக நேர்காணலில், பக்தர்கள் ஆங்கிலப் புத்தாண்டுக்கும், கலாச்சார ரீதியாக நாம் கொண்டாடும் இந்தச் சித்திரைப் புத்தாண்டுக்கும் உள்ள தனித்துவமான வேறுபாடுகள் குறித்து விளக்கமளித்தனர்.
தங்களின் இல்லங்களில் புத்தாண்டு எப்படிக் கொண்டாடப்படுகிறது என்பது குறித்தும் அவர்கள் பேசினர்.
INTERVIEW
மகிழ்ச்சியும் மங்கலமும் பொங்கும் இந்தச் சித்திரை நன்னாளில், நேயர்கள் அனைவருக்கும் வணக்கம் மலேசியாவின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்…



