Latestமலேசியா

கோலாலம்பூரில் சட்டவிரோத பந்தயம்: 9 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கோலாலம்பூர், அக்டோபர் 26 – தலைநகரில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையில், சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் வேகச் சோதனை தொடர்பான ஆறு சம்பவங்களைச் சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ கண்டறிந்துள்ளது.

விசாரணைக்காக ஒன்பது மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கோலாலம்பூர் JPJ இயக்குநர் ஹமிடி அடாம் தெரிவித்தார்.

ஜாலான் ராஜா லாவுட், ஜாலான் அம்பாங் மற்றும் நகர மையப் பகுதிகளில் நேற்றிரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புத்ராஜெயா JPJ தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற சோதனையில் 37 அமலாக்க அதிகாரிகள் ஈடுபட்டனர்.

கண்டறியப்பட்ட ஆறு சம்பவங்களில் இரண்டு சட்டவிரோத பந்தயம் தொடர்பானவை; எஞ்சிய நான்கு, சாலையில் வாகனங்களின் வேகத்தைச் சோதித்துப் பார்த்தது தொடர்பானவை என ஹமிடி கூறினார்.

மொத்தம் 35 வாகனங்கள் சோதனையிடப்பட்டதில், 11 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், பல்வேறு விதிமீறல்களுக்காக 47 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாதது, ஓட்டுநர் உரிமம் மற்றும் சாலை வரி காலாவதியானது, காப்புறுதி இல்லாதது ஆகிய குற்றங்கள் கண்டறியப்பட்டன. விதிமுறைகளுக்கு முரணான வாகன மாற்றங்கள், பதிவு எண் பலகைகள் மற்றும் புகைப்போக்கிக் குழாய்கள் தொடர்பான விதிமீறல்களும் பதிவாகின

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!