Latestமலேசியா

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயம்; பெண் உட்பட எழுவர் மீது குற்றச்சாட்டு

பினாங்கு , மே 15 – சட்டவிரோத  மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக  ஒரு பெண் உட்பட  ஏழு   நபர்கள் மீது  ஜோர்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.   கடந்த   2022ஆம் ஆண்டு   ஜூலை மாதம்   17 ஆம் தேதி  அதிகாலை   4.30 மணியளவில் நெடுஞ்சாலையில்  மற்றவர்களுக்கு  ஆபத்தை விளைவிக்கும் வகையில்  சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக   Muhammad Shazwan Hafiz Mohd Abdul Sani ,  Muhammad Sharman Mohd Salim ஆகியோர் மீது மாஜிஸதிரேட்   Nadratun Naim Mohd Saidi  முன்னிலையில்  குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றச்சாட்டை மறுத்த   Muhamad Shazwanனுக்கு     5,000 ரிங்கிட், மற்றும்    Muhamad Sharman னுக்கு  4,000 ரிங்கிட் ஜாமின்  அனுமதிக்கப்பட்டது.  

குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட    ஐவரில்  மூவருக்கு ஆயிரம் ரிங்கிட் அபராதமும்   இதர இருவருக்கு  2,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.       Shamin  Izlin என்பவருக்கு   2,000 ரிங்கிட் அபராதம்  மற்றும் இரு நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வேளையில்    Muhamad  Hilmi  என்பவருக்கு  2,000 ரிங்கிட் அபராதம்   விதிக்கப்பட்டது.   அந்த  சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தின்போது  நிகழ்ந்த  விபத்தில் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே  மூவர் உயிர் இழந்ததோடு  மேலும்  இருவர் பினாங்கு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றபோது  மரணம் அடைந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!