Latestஇந்தியாஉலகம்

சத்குருவுக்கு மூளை ரத்தக் கசிவுக்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது

புதுடில்லி, மார்ச் 21 – சத்குரு ஜக்கி வாசுதேவ் உயிருக்கு ஆபத்தான மூளை ரத்தக்கசிவு காரணமாக Delhi மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக அவரது ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அவர் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் குணம் அடைந்து வருகிறார். Appolo மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் என் மண்டையை வெட்டி எதையோ கண்டுபிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என அறுவை சிகிச்சைக்குப் பின் இன்ஸ்டாகிரேமில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில் மருத்துவமனை படுக்கையில் இருந்தவாறு நகைச்சுவையாக சத்குரு தெரிவித்தார்.

சத்குரு கடந்த நான்கு வாரங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். வலியின் தீவிரம் இருந்தபோதிலும், அவர் தனது அட்டவணை மற்றும் செயல்பாடுகளைத் தொடர்ந்தார். மேலும் மார்ச் 8 ஆம் தேதி இரவு முழுவதும் மகா சிவராத்திரி கொண்டாட்டங்களை நடத்தினார். மார்ச் 14 ஆம் தேதி மதியம் அவர் டெல்லிக்கு வந்தபோது தலைவலி கடுமையாகிவிட்டதாக ஈஷா அறக்கட்டளையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Indraprastha Appolo மருத்துவமனைகளின் டாக்டர் Vinit Suri யின் ஆலோசனையின் பேரில், சத்குருவுக்கு அவசர MRI செய்யப்பட்டதைத் தொடர்ந்து மூளையில் ஒரு பெரிய இரத்தப்போக்கு தெரியவந்தது. பரிசோதனைக்கு முந்தைய மணிநேரங்களில் நாள்பட்ட இரத்தப்போக்கு மற்றும் புதிய இரத்தப்போக்கு இருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மார்ச் 17ஆம்தேதி சத்குருவின் நிலைமை மோசமடைந்ததோடு அவரது இடதுபுற கால் பலவீனமாக இருப்பதாக தெரிவித்ததோடு மோசமான தலைவலிக்கு உள்ளாகி தொடர்ந்து வாந்தி எடுத்து வந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!