Latestமலேசியா

சபாவிலும் சிலாங்கூரிலும் கடந்த ஆண்டு அதிகமானோர் காச நோய்க்கு உள்ளாகினர்

கோலாலம்பூர், மார்ச் 18 – சபா மற்றும் சிலாங்கூரில் அதிகமானோர் கடந்த ஆண்டு TB எனப்படும் காசா நோயினால் பாதிக்கப்பட்டதாக மேலவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.

சபாவில் 5,814 பேரும் சிலாங்கூரில் 5,631 பேரும் சரவாக்கில் 3,177 பேர் அந்த நோய்க்கு உள்ளானதாக சுகாதாரத்துறை துணையமைச்சர் ‘Lukanisman Amang Sauni’ தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் 22,680 மலேசியர்கள் கடந்த ஆண்டு காச நோயினால் பாதிக்கப்பட்ட வேளையில் மலேசிய பிரஜைகள் அல்லாத 4,101 பேரும் இந்நோய்க்கு உள்ளானவர்களில் அடங்குவர் என அவர் மேலவையில் தெரிவித்தார்.

ஒதுக்குப்புறமான பகுதிகள் அல்லது சுகாதார வசதிகள் இல்லாத தொலைதூர பகுதிகளில் காச நோய் கண்டுள்ளவர்களை கண்டறிவதற்கு வசதியாக கையடக்க எக்ஸ்ரே கருவியை கொண்டிருக்கும் நடைமுறையை சுகாதார அமைச்சு இப்போது மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

காச நோயை எளிதாக கண்டறிவதற்காக நாடு முழுவதிலும் சுகாதார மையங்களில் துரித மூலக்கூறு சோதனைக்கான 62 கருவிகளும் வழங்கப்பட்டிருப்பதாக செனட்டர் டாக்டர் ‘A. Lingeswaran’ எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது ‘Lukanisman’ தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!