
சரவாக், மீரி, ஜூன் 18 – கடந்த ஒரு மாதமாக சரவாக் மீரி (Miri, Sarawak) பகுதியில் பல வணிக வளாகங்களை உடைத்து உள்ளே நுழைந்து திருட்டில் ஈடுபட்டு வந்த 30 வயது ஆடவனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் ஜூன் 10ஆம் தேதியன்று புஜுட் 2 பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளான். அவனைக் கைது செய்ததன் மூலம் ஐந்து திருட்டு வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன என்று மீரி மாவட்ட போலீஸ் தலைவர் ஃபர்ஹான் லீ அப்துல்லா (Farhan Lee Abdullah) கூறியுள்ளார்.
விமான நிலைய வர்த்தக மையம், மொஸ்ஜாயா, பெர்மிஜாயா (Mosjaya, Permyjaya) உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வணிக வளாகங்களைக் குறிவைத்து செயல்பட்ட அவன், சுமார் 15,000 ரிங்கிட் மதிப்பிலான பொருட்களை திருடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், கடைகளின் ஷட்டர்களை உடைக்க பயன்படுத்திய கருவி மற்றும் சம்பவங்களின்போது அணிந்திருந்த ஆடைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.



