Latestமலேசியா

தெருநாய் விவகாரத்தில் பாரபட்சமாக நடந்து கொள்ள வேண்டாம்: அமிருடின் ஷாரி  

ஷா ஆலாம், ஆகஸ்ட்.03- சிலாங்கூர் மாநிலத்தின் தெரு நாய்கள் பிரச்சினை தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் போது, ​​பாரபட்சமின்றி நடந்து கொள்ளுமாறு மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அனைத்து தரப்பினருக்கும் நினைவுறுத்தியுள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் விலங்குகள் நலன் என இரண்டையும் நிலைநிறுத்துவதில் மாநில அரசு உறுதியாக இருக்கிறது. அவ்விரண்டும் சமநிலையாகக் கையாளப்பட வேண்டியது அவசியம். தெருநாய்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். எனினும் மாநில அரசு பொது நலன் கருதி செயல்பட வேண்டும் என அவர் கூறினார்.

தெருநாய்களின் தாக்குதலால் பாதிக்கப்படும் குடிமக்களின் பாதுகாப்பை விட விலங்குகளின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் கூறப்படுவது தொடர்பில் அமிருடின் ஷாரி அவ்வாறு கருத்துரைத்தார். விலங்குகளைத் துன்புறுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சிலாங்கூர் Tengku Permaisuri, Tengku Permaisuri Norashikin வலியுறுத்தியிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

கடந்த மாதம் Taman Teluk Gadung Indahவில் கிள்ளான் மாநகர் மன்றம் மேற்கொண்ட தெருநாய் பிடிப்பு நடவடிக்கையின் போது நாயொன்று இறந்ததைத் தொடர்ந்து, அச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி சலசலப்பை ஏற்படுத்தியது. காவல் துறை அதனை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!