Latestமலேசியா

சாலையில் பயணிக்கும் பள்ளி வேனின் ஜன்னல் வழியாக, மாணவர் வெளியே குதித்து ஓடும் காணொளி வைரல் ; வலுக்கும் கண்டனம்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 3 – ஓடும் பள்ளி வேனின் பின்புற ஜன்னல் வழியாக, பள்ளி மாணவன் ஒருவன் வெளியே குதித்த ஆபத்தான செயல், @RienSiti SHOP EMPIRE எனும் டிக் டொக் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டதை அடுத்து, வைரலாகியுள்ளது.

அது தொடர்பான காணொளியில், எட்டு முதல் 10 வயதுக்கு உட்பட்ட ஆண் மாணவன், பள்ளி வேன் சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும் போது, ஜன்னல் வழியாக வெளியே குதிப்பதை காண முடிகிறது.

எனினும், சம்பவத்தின் போது அந்த பள்ளி வேன் மணிக்கு பத்து முதல் 20 கிலோமீட்டர் வேகத்தில் மெதுவாக சென்றதால், அசாம்பாவிதச் சம்பவம் எதுவும் நிகழவில்லை.

அந்த வேன், பள்ளியின் முன் நிற்பதற்கு முன், அதிலிருந்து குதித்து இறங்கிய அம்மாணவன், பள்ளி நுழைவாயை அடைந்ததோடு, அங்கிருந்து பள்ளிக்கு உள்ளே ஓடும் காட்சிகளும் அந்த காணொளியில் இடம்பெற்றுள்ளன.

“அதிஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை” என குறிப்பிடப்பட்டுள்ள அந்த காணொளி, சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் ஒருவரால் பதிவுச் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

அந்த காணொளியை இதுவரை 14 லட்சம் பேர் பார்வையிட்டுள்ள வேளை ; ஆயிரத்துக்கும் அதிகமான முறை பகிரப்பட்டுள்ளது.

இணையப் பயனர்கள் பலர், அம்மாணவரின் செயலை கண்டித்து வருகின்றனர். அதில் சிலர் வேன் ஓட்டுனர் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள வேளை ; மேலும் சிலர் பெற்றோர்களின் கவனிப்பு குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!