Latestமலேசியா

சிம்பாங்கில் வகுப்பறையில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட முதலாம் ஆண்டு மாணவி உயிரிழப்பு

சிப்பாங், அக்-20-சிலாங்கூர், டெங்கிலில் உள்ள பள்ளியொன்றில், வகுப்பறையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் உயிரிழந்தார்.

அச்சம்பவம் குறித்து நேற்று மாலை 7.30 மணியளவில் புகார் கிடைத்ததாக சிப்பாங் மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Norhizam Bahaman தெரிவித்தார்.

சம்பவ இடத்திலேயே அம்மணவிக்கு அவசர முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அம்மாணவி மேல் சிகிச்சைக்காக புத்ராஜயா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், மருத்துவமனையில் அம்மாணவி உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

சிப்பாங் மாவட்டக் காவல் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இன்று காலை 8 மணிக்கு புத்ராஜயா மருத்துவமனையில் அம்மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வேளையில், அச்சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள், விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் விஷ்ணு குமார் தருமா ரத்தினத்தை 011-11021528 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!