Latestமலேசியா

சிறப்பு கல்வித் திட்ட மாணவர்களுக்குத் தமிழ் & சீன மொழி கற்றல் – கல்வி அமைச்சு அறிவிப்பு

அலோர் காஜா, ஏப்ரல்-24-கல்வி அமைச்சின் 2027-ஆம் ஆண்டு புதிய தேசியப் பாடத்திட்டத்தின் கீழ், அடுத்தாண்டு முதல் ஒரு முக்கிய முன்னெடுப்புக் கொண்டுவரப்படுகிறது.

சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் உள்ள ஒருங்கிணைந்த சிறப்பு கல்வித் திட்டமான PPKI மாணவர்களுக்கு, இனி முறையாக சீனம் மற்றும் தமிழ் மொழிக் கற்றல் அறிமுகப்படுத்தப்படும்.

கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ அதனைத் தெரிவித்துள்ளார்.

​மேலும், கற்றல் கற்பித்தலை நவீனமயமாக்கும் முயற்சியாக, இவ்வாண்டு 30 மாணவர்களைக் கொண்ட 140 தமிழ்ப் பள்ளிகளுக்குத் Smart Board எனப்படும் விவேகப் பலகைகள் வழங்கப்படவுள்ளன.

மித்ரா அமைப்பின் ஒத்துழைப்புடன், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளுக்கும் Smart Board வசதிகள் உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக துணையமைச்சர் சொன்னார்.

இத்திட்டங்கள் தமிழ்ப்பள்ளிகளின் கல்வித் தரத்தை அடுத்த நிலைக்கு உயர்த்தும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மலாக்கா, அலோர் காஜாவில் மலேசியத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களின் இலக்கவியல் கருத்தரங்கை தொடக்கி வைத்த பிறகு வோங் கா வோ பேசினார்.

இந்த 3-நாள் கருத்தரங்கில் சுமார் 470 தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!