![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/25b67ff6-d28b-443a-ad2a-c7b5b9bc3d21-780x470.jpg)
சீனா, மார்ச் 18 – சீனாவில் ஆண் குழந்தை ஒன்று 10 சென்டிமீட்டர் அளவு வாலுடன் பிறந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Tenthered Spinal Cord என சொல்லப்படும் மருத்துவ நிலையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த வாலில் எந்தவித அசைவும் இருக்காது என்றும், நரம்பு மண்டலத்துடன் அது இணைந்து இருப்பதால் அதனை நீக்க முடியாது என்று திட்டவட்டமாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே, குழந்தையின் பின்புறம் வால் இருக்கும் வீடியோ, மருத்துவர் ஒருவரால் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட நிலையில், தற்போது அக்குழந்தை குறித்த செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது.