Latestமலேசியா

சுங்கை சிப்புட் தாமான் முஹிபா சுற்று வட்டார பகுதிகளில் ஏற்படும் வெள்ளத்திற்கு விரைந்து தீர்வு காண்பீர் – மணிமாறன்

சுங்கை பூலோ, பிப் 24 – சுங்கை சிட்புட் தாமான் முஹிபா, கம்போங் வீரசாமி, தாமான் வீரசாமி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் ஏற்பட்டுவரும் வெள்ளப் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என சுங்கை சிப்புட் முன்னாள் நகரான்மைக் கழக உறுப்பினர் K . மணிமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். இப்போதைய வறட்சி காலத்தில் பகலில் சுமார் 2 மணி நேரம் கடுமையாக மழை பெய்தால்கூட சுங்கை சிப்புட் வட்டாரத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்களை அச்சுறுத்துகிறது. இந்த திடீர் வெள்ளம் நள்ளிரவு அல்லது அதிகாலையில் பெய்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மணிமாறன் சுட்டிக்காட்டினார்.
முறையாக திட்டமிட்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொண்டால் இந்த திடீர் வெள்ளத்திற்கு தீர்வு காண முடியும் . முதலில் வெள்ளத்திற்கு என்ன காரணம் என்பதை வடிகால் நீர்ப்பாசனத்துறை ஆராய வேண்டும். ஏற்கனவே கோடிக்கணக்கான ரிங்கிட் செலவிட்ட போதிலும் வெள்ள பிரச்சனைக்கு இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை .

வடிகால் நீர்ப்பாசனத்துறை , மாவட்ட அலுவலகம், கோலாகங்சார் மாவட்ட மன்றம், பொதுப்பணித்துறை மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகிய அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து இந்த விவகாரத்தில் தீர்வு காண வேண்டும். அதுவும் சுங்கை சிப்புட் வட்டாரத்தை சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் பேரா ஆட்சிக்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். எனேவே அவர்களும் இந்த நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் . சுங்கை சிப்புட் வட்டாரத்தில் அதிகமான மேம்பாட்டு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டும் திடீர் வெள்ளப் பிரச்னைக்கு இன்னும் தீர்வு காணப்படாமல் இருப்பது கவலையளிப்பதாக இருக்கிறது. ஏற்கனவே தாமான் Muhibah Jaya வில் ஒரு ஆண்டுக்கு முன் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது வெள்ளத் தடுப்பு நடவடிக்கையில் முன்னுரிமை செலுத்தப்படும் என வாக்குறுதிகள் கூறப்பட்டன. ஆனால் இன்றுவரை வெள்ள பிரச்னைக்கு விடிவு ஏற்படவில்லை. . 25 ஆண்டு காலத்திற்கு முன் அமைக்கப்பட்ட கால்வாய்களை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. பெரிய கல்வெட்டுக்களை பயன்படுத்தி கால்வாய்களை அகலப்படுத்துவதன் மூலம் நீரோட்டத்தின் வேகத்தை விரைவுபடுத்த முடியும் என மணிமாறன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!