Latestமலேசியா

சுங்கை பட்டாணியில் கோர விபத்து; புதிய கார் எடுத்த சில மணி நேரங்களில் ஒரு மாதக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

சுங்கை பட்டாணி, ஜூன்-8-கெடா, சுங்கை பட்டாணி அருகே ஜாலான் குவாலா கெட்டில் சாலையில் நேற்று நிகழ்ந்த மிகக் கொடூரமான சாலை விபத்தில், ஒரு மாதக் பிஞ்சு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

​நேற்று காலைதான் பினாங்கிலிருந்து புத்தம் புதிய Proton X50 SUV காரை மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொண்டு குடும்பத்தினர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக இவர்களின் கார் எதிரே வந்த 10 டன் மண் லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

மோதிய வேகத்தில் கார் நொறுங்கியது.

​இதில் காரில் பயணித்த கணவன், மனைவி, அவர்களின் ஒரு மாத பெண் குழந்தை மற்றும் மற்றொரு பெண் உறவினர் உள்ளிட்ட 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மற்றொரு சிறுமி காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். லாரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார்.

உயிரிழந்த 6 பேரின் உடல்களும் சவப் பரிசோதனைக்காக சுங்கை பட்டாணி சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளன.

புதியக் கார் வாங்கிய சில மணி நேரங்களிலேயே ஒரு குடும்பமே பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!