Latestமலேசியா

சுங்கை பெசாரில் லோரி பட்டறையில் தீவிபத்து 80 விழுக்காடு சேதம்

ஷா அலாம், மே-5-சுங்கை பெசார், சுங்கை பாஞ்சாங், பாரிட் 13-ல் வெல்டிங் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு லோரி பட்டறையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் கிடைத்ததும் சுங்கை பெசார், சபா பெர்னாம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்களுடன், 13 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைவர் சம்சோல் மாரிப் சைபானி ( Samsol Maarif Saibani ) தெரிவித்தார்.

அந்த பட்டறை வளாகம் சுமார் 80 விழுக்காடும், தீப்பிடித்த லோரி 30 விழுக்காடும் சேதம் அடைந்தது.

இந்த தீவிபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்பதோடு தீ விபத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக Samsol கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!