
குவா மூசாங், மே-5-கிளந்தான், குவா மூசாங்கில் உள்ள Pos Balar என்ற இடத்தில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 56 வயது பெண் ஒருவர், Sungai Betis ஆற்றில் விழுந்து உயிரிழந்தார்.
கோலாலம்பூரைச் சேர்ந்த இந்த பெண் ஒரு தனித்து வாழும் தாய் ஆவார்.
இவர் 11 பேர் கொண்ட குழுவுடன் மே 1-ஆம் தேதி மலையேறத் தொடங்கினார்.
மே 2-ஆம் தேதி இரவு 7.30 மணியளவில், இருட்டில் ஆற்றைக் கடக்க முயன்றபோது அவர் நிலைதடுமாறி ஆற்றுக்குள் விழுந்தார்.
சக மலையேறிகள் அன்று இரவு முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
மறுநாள் மீட்புப் படையினர் சுமார் 10 மணிநேரம் காடுகளுக்குள் நடந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மே 3-ஆம் தேதி காலை 8 மணியளவில், விழுந்த இடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
இது ஒரு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மலைப்பகுதிகளுக்குச் செல்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டிகளை அழைத்துச் செல்ல வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.



