Latest

சுற்றுலா துறையின் பஸ்கள் வேன்களுக்கும் டீசல் உதவித் தொகை வழங்கப்பட வேண்டும் -ம.சீ.ச கோரிக்கை

கோலாலம்பூர், மே 30 – சுற்றுலா தொழில்துறையைச் சேர்ந்த பஸ் ஓட்டுனர்கள் மற்றும் வேன் ஓட்டுநர்களுக்கும் டீசல் உதவித் தொகை திட்டத்தில் சேர்த்துக்கொள்வது குறித்து அரசாங்கம் மறுஆய்வு செய்ய வேண்டுமென ம.சீ.சவின் இளைஞர் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. டீசல் உதவித் தொகைக்கான பிரிவில் சுற்றுலா தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் சேர்த்துக்கொள்ளப்படாவிட்டால் அத்துறைக்கு அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என ம.சீ.ச இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் Chong Yew Chuan தெரிவித்திருக்கிறார்.

உலகின் முக்கிய சுற்றுலா மையமான அண்டை நாடுகளிலிருந்து மலேசியா போட்டா போட்டியை எதிர்நோக்கி வருவததால் அத்துறையில் செலவை குறைப்பதற்கு டீசல் உதவித் தொகை இடம்பெறவேண்டும என அவர் வலியுறுத்தினார். சுற்றுலா தொழில் துறையில் சம்பந்தப்பட்டவர்களின் வருமானம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் மோசமான விளைவு ஏற்படுவதை தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை அவசியம் என Chong Yew Chuan வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!