
செகாமாட், ஏப்ரல்-7-ஜோகூர், செகாமாட்டில் வேன் ஒன்றை மோதி மரண விபத்தை ஏற்படுத்திய டிரேய்லர் லாரி ஓட்டுநர் மீது 3 கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
Muhamad Shafiq Salleh, எனும் 29 வயது சந்தேக நபர், ஏப்ரல் 2-ஆம் தேதி கெமாஸ் பாரு அருகே நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்புக்கு காரணமானதாக செகாமாட் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
இவ்விபத்தில் வயதான தம்பதியர் மற்றும் அவர்களது உறவினர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் கடுமையாக காயமடைந்துள்ளனர்.
விபத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட பரிசோதனையில், ஓட்டுநர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனால், அவர் மீது குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு பின்னர் உயர்நீதிமன்றத்தில் மறுசெவிமெடுக்கப்படும்.,
முன்னதாக, கிள்ளானில் மது அருந்தி மற்றும் போதைப்பொருள் உட்கொண்டு இதே போன்றதோரு மரண விபத்தை ஏற்படுத்திய காரோட்டி மீதும் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
போதை நிலையில் வாகனமோட்டுவோருக்கு எதிராக கடுமையான சட்ட அமுலாக்கம் தேவை என பொது மக்கள் கோரிக்கைகள் எழுப்பி வரும் நிலையில், இந்நடவடிக்கைகள் அமைந்துள்ளன.



