Latestமலேசியா

18 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்த ஹன்னா யோவ்

கோலாலம்பூர், செப்டம்பர் 2 — பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேசங்கள் அமைச்சரான ஹன்னா யோவ் மற்றும் அவரது கணவர் ராமச்சந்திரன் முனியாண்டி ஆகியோர் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்துள்ளனர்.

ஹன்னா யோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், அவர் 2008ஆம் ஆண்டு ராமச்சந்திரனைத் திருமணம் செய்துகொண்டதாகவும், அவர்களுக்கு ஷாய் மற்றும் கேலீ என இரு பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பிள்ளைகள் 2011 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்கள்.

ஹன்னா யோவ் செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அவர் 2008 முதல் 2018 வரை இரண்டு தவணைகள் சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினராகவும், 2013ஆம் ஆண்டு சிலாங்கூர் சட்டமன்றத்தின் முதல் பெண் சபாநாயகராகவும் பதவி வகித்தார்.

2018ஆம் ஆண்டு பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சராகப் பொறுப்பேற்ற அவர், 2022 முதல் 2025 வரை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 2025 டிசம்பரில் பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேசங்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!