Latestமலேசியா

செர்டாங் மருத்துவமனையின் புதிய இருதய அறுவை சிசிச்சை அறைகளில் பிரச்னை; சிலாங்கூர் சுகாதார தலைவர் ஒப்புக்கொண்டார்

Serdang Sultan Idris Shah மருத்துவமனையில்  புதிதாக  இருந்த  சிகிச்சை  மையத்தில்  உள்ள அறுவை சிகிச்சை  அறைகள்  மின்சார  விவகாரங்கள் மற்றும் அதிகமான ஈரப் பதத்தினால்   இன்னும்  பயன்படுத்த முடியாமல் இருப்பதை  சிலாங்கூர்   சுகாதார இயக்குனர்   டாக்டர்  Ummi Kalthom Shamsuddin  உறுதிப்படுத்தினார்.  எனவே இப்போதைக்கு  இருதய  அறுவை சிகிச்சைகள் மருத்துவமனையின்  பிரதான பிரிவில் மேற்கொள்ளப்படும் வேளையில்,  சில நோயாளிகள்   கோலாலம்பூரில் உள்ள   தேசிய இருதய சிகிச்சை மையமான  IJN மற்றும் இதர தனியார்  மருத்துவமனைகளுக்கு  சிக்சைக்காக  அனுப்பிவைக்கப்படுவதாக  அவர்  தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு இருதய நோயாளிகளை  அறுவை சிகிச்சைக்காக  தனியார் சுகாதார நிலையங்களை தற்காலிகமாக Outsourced  ஏற்பாடு செய்துள்ளது.  இந்த முயற்சி திட்டமிடுதலின் இறுதி கட்டத்தில் உள்ளது மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார். ஆனால் Serdang மருத்துவமனையின் பொது வார்டுகள், இதய மையத்தில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு  உள்ளிட்டவை முழுமையாக செயல்படுவதாக டாக்டர் Ummi Kalthom  தெரிவித்தார்.  இந்த வளாகம் செயல்படத் தொடங்கும் முன், பொதுப்பணித் துறையின் கண்காணிப்பின் கீழ் முக்கிய ஒப்பந்தக்காரரால் மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று டாக்டர்  Ummi Kalthom தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!