சைபர்ஜெயா, ஏப்ரல் 28 – பழன் அறவாரியமும் தமிழவேள் கோ.சா. கல்வி அறவாரியமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த தமிழ் அமுது எனும் இலக்கிய நிகழ்ச்சியையும் விருந்தளிப்பு விழாவும் நேற்று சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தில் மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.
இலக்கியத்தின் வழி சீர்மிகு எதிர்காலத்தை வடிவமைப்போம் எனும் கருப்பொருளுடன் நடைபெற்ற இந்த இலக்கிய நிகழ்ச்சியில் ஏறக்குறைய 600 ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ் இலக்கிய கூறுகளையும் அதன் பெருமைகளையும் சமூதாயத்திற்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் செயல்படுத்த இலக்கு கொண்டுள்ளதாக சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும், பழன் அறவாரியத்தின் ஆலோசகருமான தான் ஸ்ரீ பழன் தெரிவித்தார்.
இதனிடையே, டத்தோ ஸ்ரீ தெய்வீகன் ஏற்பாட்டுக் குழுத் தலைவராகப் பொறுப்பேற்று நடைபெற்ற இது போன்ற நன்நிகழ்ச்சிகள் சமூதாய மாற்றத்திற்கு வழிவகுத்திடும் என்று குறிப்பிட்டார் ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டுத் தன்முனைப்புப் பேச்சாளர் ஐ.பி.எஸ் கலியமூர்த்தி பேருரை வழங்கியத்துடன் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன், நாடறிந்த வழக்கறிஞர் பாண்டித்துரை மற்றும் கோசா கல்வி அறவாரியத்தின் தலைவர் தெய்வீகன் ஆகியோர் இலக்கிய உரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியை மேலும் மெருக்கூட்டும் வகையில், சமூதயத்தின் தேவைக்காக உழைப்பவர்கள், சாதனை செய்தவர்கள் என்று இம்முறை அடையாளம் கண்ட தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ சகாதேவன், மலாயா பல்கலைக்கழக நூலக அதிகாரி விஜயலட்சுமி, சிறைச்சாலை துறையின் முன்னாள் துணை கொமிசியனர் அண்ணாதுரை காளிமுத்து
ஆகியோருக்கு தமிழ் அமுது அங்கிகாரம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.