Latestஉலகம்

ஜப்பானின் மேற்குப் பகுதியில் ரெக்டர் கருவியில் 6.3 அளவில் பதிவான நில நடுக்கம்

தோக்யோ, ஏப் 18 – ஜப்பானின் தென் மேற்குப் பகுதியில் ரெக்டர் கருவியில் 6.3 அளவில் பதிவான நிலநடுக்கம் நேற்றிரவு உலுக்கியது, எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லையென அமெரிக்க புவியியல் நிறுவனம் தெரிவித்தது. Uwajimaவிலிருந்து மேற்கே 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள Kyushu மற்றும் Shikoku தீவுகளை பிரிக்கும் கால்வாயில் சுமார் 25 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி கொண்டிருந்தது.

அந்தப் பகுதிகளில் அதிர்வு வலுவாக இருந்தது. எந்த ஆபத்தான பகுதிகளையும் அணுக வேண்டாம். இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை” என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம்த்தின் சமூக ஊடக தளமான x இல் தெரிவித்துள்ளது. அப்பகுதியில் உள்ள Ikata அணுமின் நிலையம் வழக்கம்போல் இயங்கிவருவதாக ஜப்பானின் அணுசத்தி கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!