Latestமலேசியா

ஜாசின் காஜாங் பெர்டானாவில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட இடத்தை சீரமைக்க 2.3 மில்லியன் ரிங்கிட் செலவாகும்

மலாக்கா, ஜாசின் Kajang Perdana, Taman Lipat -டில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதியை சீரமைப்பதற்கு 2.3 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரய்ஸ் யாசின் ( Rais Yasin ) தெரிவித்திருக்கிறார். நீண்ட கால தீர்வுக்காக இந்த ஒதுக்கீடு விரைவில் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். நீர்த் தேக்கம் மற்றும் மண் சரிவினால் 2022 ஆம் ஆண்டு முதல் ஏற்பட்டு வந்த நிலச்சரிவு தற்போது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட இடத்தை ஜாசின் நகரான்மைக் கழகம் மற்றும் பொதுப் பணித்துறையின் பணியாளர்கள் பலமுறை பார்வையிட்டதோடு பொதுப் பணித்துறை மற்றும் வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சிடம் மானியத்திற்காக விண்ணப்பம் செய்துள்ளதாகவும் ராய்ஸ் யாசின் தெரிவித்தார். மானியம் இன்னும் கிடைக்கவில்லை. அந்த நிலச்சரிவு பிரச்சனை மேலும் மோசமடையாமல் இருப்பதற்காக பாதிக்கப்பட்ட பகுதியை விரைவில் சீரமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!