
கிள்ளான், மே-21-அண்மையில் 75 வயதான முதியவர் ஒருவர், கார் ஓட்டி விபத்துக்குள்ளாக்கியதில் இரண்டு சகோதரிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து கிள்ளான் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டபோது நீதிபதியின் முன்னிலையில் அவர் அக்குற்றத்தை மறுத்துள்ளார்.
இந்த விபத்து மே 15ஆம் தேதி ஜாலான் பெக்கான் பாரு பகுதியில் நடந்தது. அவர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் 61 மற்றும் 56 வயதான இரண்டு பெண்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
நீதிமன்றம் அவருக்கு 10,000 ரிங்கிட் ஜாமீன் விதித்ததைத் தொடர்ந்து அவரது ஓட்டுநர் உரிமத்தையும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்தது.
இந்த வழக்கு மீண்டும் ஆகஸ்ட் 4ஆம் தேதி விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



