Latestமலேசியா

சிரம்பான் ஸ்ரீ மகா ராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தில் கோலாகலமாக நடைபெற்ற சப்தமூர்த்திகள் தேர் திருவிழா

சிரம்பான், ஜூலை-5-சிரம்பான் ஸ்ரீ மகா ராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தில் மிகவும் கோலாகலமாக ‘சப்தமூர்த்திகள் தேர் திருவிழா’ நடைபெற்றது.

கோவில் நிர்வாகத்தின் அழைப்பின் பேரில், மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ என். சிவகுமார் இந்தச் சிறப்பு பிரார்த்தனை விழாவில், பக்தர்களுடன் கலந்து கொண்டு இறைவனின் அருளைப் பெற்றார்.

இந்து கலாச்சாரம் மற்றும் ஆன்மீகப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் அமைந்த இந்த ஏழு தேர்களின் அணிவகுப்பு, பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

ஒற்றுமையையும் பக்தியையும் மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்தத் தேர் திருவிழாவை, மிகவும் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் ஏற்பாடு செய்திருந்த கோவில் தலைவர் மற்றும் நிர்வாகக் குழுவினருக்கு சிவகுமார் பாராட்டுத் தெரிவித்தார்.

​இந்த ஆன்மீகப் பெருவிழா, பக்தர்களிடையே அமைதியையும், நல்லிணக்கத்தையும், செழிப்பையும் கொண்டு வரட்டும் என்று வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பக்தர்களின் கூட்டு முயற்சியால், தர்மத்தின் பாதையில் இந்தச் சப்தமூர்த்திகள் ஊர்வலம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!