
வாஷிங்டன், ஜூலை-5-தற்போது நடைபெற்று வரும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியில் அமெரிக்கா வாகை சூடினால், ஒரு கால்பந்தை நிலவுக்கு அனுப்பப் போவதாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சித் துறையான நாசா அறிவித்துள்ளது.
அமெரிக்கக் கால்பந்து அணியை உற்சாகப்படுத்தும் விதமாக, நாசா நிர்வாகி Jared Isaacman இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, அமெரிக்க அணி உலகக் கிண்ணத்தை வென்றால், வீரர்கள் கையெழுத்திட்ட ஜெர்சி மற்றும் ஒரு கால்பந்தை நாசா தனது நிலவுத் திட்டப் பயணத்தின் ஒரு பகுதியாக நிலவுக்குக் கொண்டுச் செல்லும்.
நிலவில் மனிதன் கால்பதித்தது எப்படி ஒரு வரலாற்றுச் சாதனையாக அமைந்ததோ, அதேபோல உலகக் கிண்ண வெற்றியும் அமெரிக்காவுக்கு ஒரு பெரிய மைல்கல்லாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த அறிவிப்பு அமெரிக்க விளையாட்டு இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா அடுத்து கடைசி 16 அணிகள் மோதும் ஆட்டத்தில், பெல்ஜியமைச் சந்திக்கிறது.
அதில் வெற்றிப் பெற்றால் தான் அடுத்தடுத்த சுற்றுகளுக்குத் தகுதிப் பெற முடியும்.
ஆக, அமெரிக்கா இந்த சவாலை வெல்லுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்…



