ஜோகூர் பாரு, பிப் 26 – மார்ச் 12 ஆம் தேதி நடைபெறும் ஜோகூரின் 15ஆவது சட்டமன்ற தேர்தலில் வரலாற்றில் முதல் முறையாக ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது நான்கு முதல் ஏழு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இன்று காலை 9 மணிக்கு மொத்தம் உள்ள 56 தொகுதிகளிலும் சுமுகமாக வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்றது.
கிட்டத்தட்ட அனைத்து தொகுதியிலும் நான்கு முதல் 7 பேர் வேட்பு மனுத் தாக்கலை செய்துள்ளனர் என ஜோகூர் தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ Hasni Mohammad தெரிவித்தார்.
நாட்டின் ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறையாக இது திகழ்வதாக அவர் வருணித்தார்.