Latestமலேசியா

ஜோகூர் தேர்தலில் அனைத்து தொகுதியிலும் பெரிக்காத்தான் நேசனல் போட்டியிடும்

கோலாலம்பூர், மே 19 – தேசிய முன்னணி மற்றும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிகளைப் பின்பற்றி, வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் அனைத்து 56 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக பெரிகாத்தான் நேஷனல் (PN) தெரிவித்துள்ளது.

இருப்பினும், எதிர்க்கட்சிகளிடையே மோதல்களைத் தவிர்ப்பதற்காக, மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கூட்டணி தயாராக இருப்பதாக பெரிக்காத்தான் நேசனல் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் கூறினார்.

அதே வேளையில் எதிர்க்கட்சிகள் ஒன்றுக்கொன்று எதிராகப் போட்டியிடாத வகையில், நாங்கள் பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கலாம் என்று துவான் இப்ராஹிம் பாஸ் தலைமையகத்தில் கூறினார்.

ஜோகூர் மாநிலத் தேர்தலில் மட்டுமல்லாமல், மற்ற மாநிலங்களிலும் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளை எதிர்கொள்ள பெரிக்காத்தான் நேசனல் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜோகூர் மாநிலத் தேர்தலில் பெரிக்காத்தான் நேசனல் அனைத்து 56 தொகுதிகளிலும் போட்டியிட்டபோதிலும் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. 40 இடங்களை வென்ற பிறகு தேசிய முன்னணி மாநில அரசை அமைத்தது.

அத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் 12 இடங்களையும், மூடா ஒரு இடத்தையும் கைப்பற்றியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!