
ஷா அலாம், நவ 6 – ம.இ.கா தேசிய தலைவர் டான்ஸ்ரீ SA . விக்னேஸ்வரன் அவர்களின் அன்புத் தம்பியும் , Pertubuhan Intergrasi Nasional நிறுவனரும் போர்ட் கிள்ளான் ம.இ.கா ஜாலான் செரோஜா கிளைத் தலைவருமான டத்தோ பாலன்குமாரன் சன்னாசி அவர்களின் இறுதி சடங்கில் ம.இ.கா கிளை தலைவர்கள், மத்திய செயற்குழு உறுப்பினர்கள், அரசு சார்பற்ற இயக்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் நண்பர்கள் என திரளானோர் கலந்துகொண்டனர். போர்ட் கிள்ளான் ஜாலான் செரோஜா அருள் மிகு ஸ்ரீ நாகம்மாள் ஆலயத் தலைவருமான பாலன்குமாரன் உடல் நலமின்றி இருந்ததைத் தொடர்ந்து சனிக்கிழமை காலையில் காலமானர்.
அவருக்கு மனைவி டத்தின் சுபா , சன்னாசி தேவன், சாரங்கன் தேவன், சங்கராத் மஜன் ஆகிய மூன்று ஆண் பிள்ளைகளும் உள்ளனர். இன்று காலை எண் 19, Jalan Anggerik Vanda II, கோத்தா கமுனிங் ஹில்ஸ், ஷா ஆலாம் என்ற முகவரியிலுள்ள பாலன்குமாரன் இல்லத்தில் நடைபெற்ற இறுதி சடங்கிற்குப் பின் நண்பகல் மணி 12 அளவில் அவரது நல்லுடல் ஷா அலாம் செக்சன் 21 இல் உள்ள நிர்வானா நினைவு பூங்காவிற்கு கொண்டுச் செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது.