Latestமலேசியா

டீசல் உதவித் தொகை மானியத்தை பெற ரசீதை பயன்படுத்தலாம்

கோலாலம்பூர், ஜூன் 11 – தகுதி பெற்ற Budi Madani விண்ணப்பதாரர்கள் இன்னும் Fleet அட்டையைப் பெறாவிட்டாலும் , டீசல் பயன்படுத்தியதற்கான ரசீதுகளை வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். விரைவில் நிதி அமைச்சினால் அறிவிக்கப்படவிருக்கும் உதவிக்கான ரொக்க தொகையை திரும்பப் பெறுவதற்கான வழிமுறை குறித்து போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் (Anthony Loke ) விளக்கம் அளித்தார். ஒருவேளை ஒருவர் தாமதமாக விண்ணப்பப்பம் செய்திருந்தால் இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட Fleet அட்டையை பெற முடியாமல் இருக்கக்கூடும். அப்படிப்பட்டவர்கள் டீசல் வாங்கியதற்கான ரசீது வைத்திருந்தால் அதனை உள்நாட்டு வாணிகம் மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சிடம் கொடுத்து ரொக்க உதவித் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு முன் Fleet அட்டை பெறாதவர்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லையென அந்தோனி லோக் தெரிவித்தார். எனவே அவர்கள் வைத்திருக்கும் ரசீது மூலம் பணத்தைத் திரும்பப் பெறலாம். நாங்கள் பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கான வழிமுறை இருக்கும் தொழில்முனைவோருக்கு உதவி தொகைக்கான Budi Madani விண்ணப்பம் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்று கூறும் சில தரப்பினரின் அறிக்கைகள் குறித்து கருத்துரைக்கும்படி வினவப்பட்டபோது அந்தோனி லோக் இத்தகவலை வெளியிட்டார். Malaysia Rail link Sdn Bhd இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட நிகழ்ச்சியை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசியோது அவர் இதனை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!