
டுங்குன், மே 5 – Perhilitan எனப்படும் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையால் வைக்கப்பட்ட பொறியில் இன்று ஒரு சூரிய கரடி வெற்றிகரமாக நுழைந்ததால் Kampung rantau Abang குடியிருப்புவாசிகள் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.
காலை மணி சுமார் 6.45 அளவில் தனது தோட்டப் பகுதியில் PERHILITAN அமைத்த பொறியில் சூரிய கரடி நுழைவதைக் கண்டதாகக் குடியிருப்புவாசிகளில் ஒருவர் கூறினார்.
மார்ச் 2 ஆம் தேதியன்று 40 கிலோ எடையுள்ள ஒரு சூரிய கரடி PERHILITAN அமைத்த பொறியில் நுழைந்ததாகவும், ஆனால் அடுத்த நாள் தனது தோட்டத்திற்கு அருகில் மற்றொரு கரடியைக் கண்டதாக அவர் குறிப்பிட்டார்.
பொறி வைக்கப்பட்ட இரண்டு மாதங்களாக, தாம் எப்போதும் பலாப்பழம் மற்றும் செம்படாக் தோல்கள் போன்ற இரைகளையும், சமையல் எண்ணெயையும் வைத்து வருவதாகவும் நல்ல வேளையாக, இன்று மற்றொரு கரடி வெற்றிகரமாகப் பிடிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
இதனிடையே மேலும் ஒரு சூரிய கரடி இன்னும் பிடிபடாமல் சுற்றித் திரிவதாகவும், இந்த நிலைமை குடியிருப்பாளர்களைக் கவலையடையச் செய்வதாக Rantau Abang கிராம பாதுகாப்பு மேம்பாட்டு குழுவின் தலைவர் Atan Mat Nor தெரிவித்தார்.



