Latestஉலகம்

கோப்பன்ஹெகன்னில் டென்மார்க் பிரதமர் ஆடவனால் தாக்கப்பட்டார்

கோப்பன்ஹெகன் , ஜூன் 8 – கோப்பன்ஹெகன் சதுக்கத்தில் டென்மார்க் பிரதமர் Mette Frederiksen ஆடவன் ஒருவனால் தாக்கப்பட்டார். அந்த சம்பவம் தொர்பில் Frederiksen பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானதாகவும் எனினும் இதனை தொடர்ந்து மேல் விவரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லையென பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. கோப்பன்ஹெகன்னில் Kultorvet-ட்டில் வெள்ளிக்கிழமை பிரதமரை தாக்கிய ஆடவன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மணி 6 அளவில் பிரதமர் Mette Frederiksen தாக்கப்பட்டதை தாங்கள் பார்த்ததாக இரு சாட்சிகளான Marie Adrian மற்றும் Anna Ravn தெரிவித்ததாக BT பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எதிரே வந்த ஆடவன் ஒருவன் Mette Frederiksen தோளில் கை வைத்து வேகமாக தள்ளியதால் அவர் ஓரமாக விழுந்ததை அந்த இரு பெண்களும் கூறியுள்ளனர். அவரை தள்ளிய மெல்லிய உருவம் கொண்ட அந்த ஆடவன் உயரமாக இருந்தான் என்றும் அங்கிருந்து தப்பியோட முயன்றபோது பிரதமரின் மெய்க்காப்பாளர்கள் அவனை விரட்டிப் பிடித்தனர் என கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!