Latestமலேசியா

தங்காக்கில் பாரங்கத்தியால் வெட்டிக்கொலை; 3 பேருக்கு குற்றச்சாட்டு

தங்காக், மே 12 – தங்காக் புக்கிட் கங்கார், சுங்கை மாத்தி (Bukit Kangkar, Sungai Mati) பகுதியில், ஆடவர் ஒருவரைப் பாரங்கத்தியால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் தொடர்பில், ரகசிய கும்பலைச் சார்ந்த ஒருவன் உட்பட மேலும் மூன்று பேர் இன்று தங்காக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் கீழ் வருவதால், அவர்களிடமிருந்து எந்தவித குற்ற ஒப்புதலும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த மார்ச் 13-ஆம் தேதி, 38 வயது மதிக்கத்தக்க ஆடவரைக் கொலை செய்த குற்றத்திற்காக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சிசிடிவி காட்சிகளில், முகத்தை மறைத்த மூவர் பாராங் கத்திகளுடன் பாதிக்கப்பட்ட ஆடவரைத் துரத்திச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு மீண்டும் ஜூலை 14-ஆம் தேதி விசாரணைக்கு உட்படுத்தப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!