Latestமலேசியா

தனித்து வாழும் தாயான ஒலிவியா இணையப் பகடிவதையால் அவதி– 24 மணி நேரத்தில் தொடர்பு அமைச்சர் பாமி பாட்சில் மூலம் உடனடி தீர்வு

கோலாலம்பூர், செப்டம்பர் 10 – டாமான்சாராவை சேர்ந்த தனித்து வாழும் தாயான Oliviea Lopez-யும், இணையப் பகடிவதை விட்டு வைக்கவில்லை.

அவரும் இந்த இணையப் பகடிவதையில் பாதிக்கப்பட்டு, அந்த அழுத்தம் அவரின் மகளைத் தற்கொலைக்கு இட்டுச் சென்றதாக வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.

மதம் மாறி, ‘Spiritual Healing’ எனும் ஆன்மீக சிகிச்சை மேற்கொண்டதால், சில தரப்பினரிடையே கேள்விகளையும், அதிருப்தியையும் ஏற்படுத்திய நிலையில், நான்கு குழந்தைகளின் தாயான Olivia மீது இணையத்தில் பலவாறாகக் கருத்து பதிவிட்டுத் தாக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அக்கருத்துகளைக் குறித்துத் தான் பொருட்படுத்தவில்லை எனக்கூறிய அவர், மனவேதனைக்குறிய வகையில், சிலர் தனது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை ஆபாசப் புகைப்படங்களாக மாற்றியும், நகைச்சுவையாகப் பயன்படுத்தி இணையத்தில் வெளியிட்டு தாக்கியதையும் பகிர்ந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, Hypnotiser எனும் அறிதுயில் சிகிச்சை வழங்குபவரான Oliviea Lopez, காவல் துறை புகார்களுடன் தொடர்புடைய ஆதாரங்களையும் கொண்டு தொடர்பு துறை அமைச்சில் புகார் வழங்கியதில், அவருக்கு அமைச்சர் பாமி பாட்சில் மூலம் உடனடி தீர்வு கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இணையப் பகடிவதையால் இன்னொரு மரணம் ஏற்படக்கூடாது என்பதே Oliviea Lopez-யின் வலியுறுத்தலாகும்.

ஏசா மரணம் மட்டுமே போதுமானது. இனி, இது போன்ற இணையப் பகடிவதையில் பாதிக்கப்பட்டவர்கள் அமைதியைக் கடைப்பிடிப்பதை விடுத்து, உடனடியாக உதவி கேட்டு, தக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர், கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!